சர்வாண்டேஸ்

செர்வான்டெஸின் டாண் கியோட்டே / ஆசிரியர் மிகல் டே சர்வாண்டேஸ் ; தமிழில் அ. அலங்காமணி - 1st ed. - சென்னை : சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 2014. - 408 p. : ill. ; 20 cm. ill. 20 cm.

காலத்தை கடந்து நிற்கும் நாவல்கள் சில உண்டு அந்த நாவல்களின் வரிசையில் டாண் கியோட்டே முக்கியமானது. திரு. ஆ. அலங்காமணி அவர்கள் இயற்கையாகவே பழகுவதற்கு வெகு சுவாரஸ்யமான மனிதர் அவர் பேசும் போது இதிகாசங்களை வாசித்து உணர முடியாத பல கதாப்பாத்திரங்களின் குணாதிசியங்களை மற்றவர் மனதில் எளிதில் ஆணி அடித்து மாட்டிவிடும் திறமை வாய்ந்தவர் என்பதை உணர்வீர்கள்.இந்த நாவலின் மூலச்சுவை குறையாமல், ஆனால் பாமரனும் படித்து மகிழ வேண்டும், என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு எளிமையான நடையில் மிகத் திருத்தமாக படைத்துள்ளார். இந்தப் புத்தகத்தை படிக்கும்பொழுது நீங்கள் மனம் விட்டு சிரிக்கும் தருணங்கள் எண்ண முடியாதவை. பதினாறாம் நூற்றாணடில் வெளிவந்த முதல் நவீன நாவலான டாண் கியோட்டே படித்து ஒவ்வொரு வரியாக ரசித்து மகிழ்ந்த திரு அலங்காமணி அவர்கள் அந்த மகிழ்ச்சியை தமிழ் ஆர்வலர்களிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நினைத்தார்.‘‘நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக’’ என்ற கொள்கையுடையவர் திரு. அலங்காமணி அவர்கள் இந்த நாவலை எழுத இந்த கொள்கை முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

9789382577898


புதினம்\சிறுகதைகள், நாவல்

863.3 / CER